சுந்தரேச சுவாமிகள்
சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு பக்தர்களுக்கு அம்மாவின் அருளைப் பெற்று அருள் வாக்கு வழங்கும் அம்மன் அடிமையாக வாழ்ந்து வருகிறார்.

மிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் நகரத்தில் அமைந்து உள்ள அகரம் கிராமத்தில் ராஜு உண்ணாமலை தம்பதிகளுக்கு முதல் மகனாக 1961 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி தவத்திரு சுந்தரேச சுவாமிகள் பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு பக்தர்களுக்கு அம்மாவின் அருளைப் பெற்று அருள் வாக்கு வழங்கும் அம்மன் அடிமையாகவும் மனித உருவில் வாழ்ந்து வருகிறார்.

சுவாமியின் உறுதிமொழியும் நிறைவேறுதலும்

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தரும் ஸ்ரீ ராஜகாளி அம்மனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சுந்தரேச சுவாமிகள் 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23ம் தேதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது கனவில் பேரொளிப் பிழம்பாக ஸ்ரீ ராஜகாளி அம்மன் தோன்றி இவ்விடத்தில் 60 அடி உயரத்துடன் தன்னை சிலை வடிவில் வடிவமைக்குமாறு கட்டளையிட்டார். அன்றே அக்கணமே அம்மனின் அருள் சுரந்தது. அவரைக் கருவியாகக் கொண்டு ஸ்ரீ ராஜகாளி அம்மன் தன் ஆலயப்பணியைத் தொடங்கி விட்டாள். பல இடையறுகளுக்கு மத்தியில் அம்மனின் கட்டளைக்கு இணங்க சுந்தரேச சுவாமிகள் தனக்குத் தானே உறுதி மொழிகளையேற்று, தனது உறுதி மொழிப் படி 22 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது அயராத உழைப்பினால் 60 அடி உயர ஸ்ரீ ராஜகாளி அம்மனை நிறுவினார். கடந்த 03.04.2006 அன்று கும்பாபிஷே கத்தையும் சிறப்பாக நிறைவு செய்தார். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிருந்து வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள் வாக்கு வழங்கி நிவர்த்தி செய்து வருகிறார்.



{ புகைபடங்கள் }

 

அம்மன், உற்சவர், திருவிழாக்கள், சுவாமிகள் புகைபடங்கள்

மேலும்

{பலன்கள் }

 

வாழ்க்கையில் அதிக அளவில் துயரங்களையே சந்தித்து வந்த மனிதர்கள் இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராஜகாளி அம்மனைத் தரிசித்த பிறகு அளவில் அடங்கா ஆனந்தத்தையும் மன அமைதியையும் அடைகிறார்கள். பக்தர்களின் குறைகளையெல்லாம் கருணையோடு நீக்கி அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ ராஜகாளி அம்மன்.

மேலும்