பின்னர் அம்மனுக்குப் பட்டாடை உடுத்தி நகைகள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரித்து, தீபாரதனை காட்டிப் பூசை செய்யப்படுகிறது. பக்தர்கள் மெய்மறந்து இந்த அம்மனை வழிபட, பேசும் தெய்வமாக சாந்த காளியம்மன் அருள் தருகிறார்.
பக்தர்கள் வழங்குகின்ற எலுமிச்சை கனிகளால் 60 அடி நீளத்திற்கு எலுமிச்சை மாலை கட்டப்பட்டு அம்மனுக்குச் சாத்தப்படுகிறது. 60 அடி உயர ஸ்ரீ ராஜகாளி அம்மனுக்குப் பூஜைகள் ஆரம்பம் ஆகின்றன. பக்தர்கள் கொண்டு வரும் எலுமிச்சை கனிகளின் மூலம் பக்தர்களின் எண்ணங்கள் நிறைவேற சுந்தரேச சுவாமிகளின் சீடர்களால் பக்தர்களின் வேண்டுதல்கள் அம்மன் பாதத்தில் சமர்பிக்கப் படுகின்றன.
ஸ்ரீ ராஜகாளி அம்மனை 18 முறை சுற்றி வலம் வரும் பக்தர்களுக்கு இன்பங்கள் பெருக வாழ்வில் செழிப்படைய அருள்புரிகிறாள். பெண் பக்தர்கள் நாகலிங்க மரத்திற்கு அகல் விளக்கு ஏற்றித் தமது தாலி பாக்கியம் நிலைக்க பிராத்தனை செய்கிறார்கள். இதனால் பக்தர்களிடம் உள்ள துன்பம் என்னும் இருட்டை நீக்கிச் சகல இன்பங்களையும் தருகிறாள். தவத்திரு சுந்தரேச சுவாமிகளின் தலைமையில் யாக சாலை மண்டபத்தில் மாபெரும் யாகம் தொடங்குகிறது. யாகத்தின் போது திராட்சை, நெய், இனிப்பு, பலகாரங்கள், பட்டு சேலைகள் மற்றும் யாக பொருட்களை அக்னியில் இட்டு சாஸ்திரிகள் மந்திரங்கள் ஓத சுந்தரேச சுவாமிகள் யாகம் நடத்துகிறார். யாகத்தின் போது அலை அலையாய் வரும் பக்தர்களின் கூட்டம் அம்மனின் அருள் பெற்று மெய் மறந்து அருள் ஆட்டம் ஆடுகிறார்கள். ஸ்ரீ ராஜகாளி அம்மனின் சேவகனுக்குப் பாத பூஜை நடத்தி மேல தாள இசை முழங்க பரி வட்டம் கட்டப்படுகிறது. பிறகு பூர்ண கும்பம மரியாதை சுந்தரேச சுவாமிகளுக்கு அளிக்கப்பட்ட பின்பு அம்மன் ஊர்வலமாக வரும்போது பெண் பக்தர்களும், ஆண் பக்தர்களும் மெய் மறந்து அருள் ஆட்டம் ஆடுவதும், பாடுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு இராஜ அலங்காரத்தோடு இருக்கும் ஸ்ரீ ராஜகாளி அம்மனை பல்லாக்கில் பக்தர்களோடு யாக மண்டபத்திலிருந்து சாந்தகாளியம்மன் சன்னதிக்குக் கொண்டு வருவர். இந்நிகழ்ச்சியில் சுமார் 7000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டு அருள பெறுகிறார்கள். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிற்பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
சித்திரை திருவிழா
நம்பிக்கை ஒளி தரும் ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா 13 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் முதல் நாள் விடியற்காலை 2 மணியிலிருந்து பூஜைகள் ஆரம்பமாகின்றன. விடியற்காலை 2 மணிக்கு துர்கா ஹோமமும் 4 மணிக்கு கலசாபிஷேகமும் 5 மணிக்கு ஸ்ரீ ராஜகாளி அம்மனுக்கு அலங்காரமும் செய்ய, திருவிழா ஆரம்பமாகிறது. பிற்பகல் 1 மணிக்கு 1008 பால்குட அபிஷேகமும் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணியளவில் இருமுடி, தீச்சட்டி, பூக் கரகம், மஞ்சள் இடித்தல், அலகு குத்துதல் மற்றும் மாலையில் இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகின்றன. மறுநாள் ஸ்ரீ ராஜகாளி அம்மனுக்கு அபிஷே கமும் தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. இதில் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்கின்றனர். தாமரை போன்ற அழகிய கண்களை உடைய ஸ்ரீ ராஜகாளி அம்மனின் மலர்ப் பாதங்களில் நமது எண்ணங்களையெல்லாம் குவித்து விட வேண்டும். இதன் மூலம் ஸ்ரீ ராஜகாளி அம்மன் பக்தர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து அருள் பாலிக்கிறார் இவ்வாறாக ஒவ்வொரு வருடமும் இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
சுந்தரேச சுவாமிகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிருந்து வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள் வாக்கு வழங்கி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
மேலும்{ அன்னதானம் }
தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று நடைபெறும் அன்னதானத்திற்கும்....
தங்களின் குடும்பத்தினர் மற்றும்..
{ புகைபடங்கள் }
அம்மன், உற்சவர், திருவிழாக்கள், சுவாமிகள் புகைபடங்கள்