தினந்தோறும் செந்தூரம் வீசும் காலைப் பொழுதினிலிருந்து பூஜைகள ஆரம்பமாகின்றன. காலை 8 மணிக்குக் காலசந்தி பூஜையும், மாலை 5 மணிக்குச் சாயரட்சையும் ஆகம விதிப்படி நடை பெற்றுவருகின்றன.
திருகோயில் திறந்து இருக்கும் நேரம்
காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருக்கோவிலை வந்தடைய
வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் நகரத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது
புகைவண்டி மூலமாக:
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் பெங்களுரு, கோயமுத்தூர் மற்றும் திருவனந்தபுரம் மார்க்கம் புகைவண்டியில் பயணித்தால், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் இறங்கி, பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை திருக்கோவிலை வந்தடையலாம்.
பேருந்து மூலமாக:
சென்னை-சேலம் (வேலூர் வழியாக) நெடுஞ்சாலையில், திருப்பத்தூர் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேருந்து, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ மூலமாக இத்திருக்கோவிலை வந்தடையலாம்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் 9 மணி முதல் 3 மணி வரை காரமுள் மீது அமர்ந்து அருள்வாக்கு சொல்லப்படும்.
{ அன்னதானம் }இத்திருக்கோயிலில் 16.12.2009 முதல் தினமும் மதிய வேளையில் அன்னதானம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சீறிய முறையில் தொடர்ந்து செயல்படுத்த பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்க வேண்டுகிறோம்.
{பலன்கள் }
வாழ்க்கையில் அதிக அளவில் துயரங்களையே சந்தித்து வந்த மனிதர்கள் இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராஜகாளி அம்மனைத் தரிசித்த பிறகு அளவில் அடங்கா ஆனந்தத்தையும் மன அமைதியையும் அடைகிறார்கள். பக்தர்களின் குறைகளையெல்லாம் கருணையோடு நீக்கி அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ ராஜகாளி அம்மன