பண்பாடு மிகுந்த தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மலைகளின் சுவாசம் கொண்ட சந்தன மாநகரமான திருப்பத்தூர் நகரத்தின் அருகில் அமைதியின் சொர்க்கமாய்த் திகழும் ஜவ்வாது மலையின் தொடர்ச்சியின் கீழ், தென்றல் தாலாட்டும் தென்னைமரத் தோப்புகள் நிறைந்த எழில் கொஞ்சும் அகரம் கிராமத்தில் ஸ்ரீ ராஜகாளி அம்மன் 60 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் எழிலுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
உலக சக்தியாய் நிற்கும் மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம் கொண்ட ஸ்ரீ ராஜகாளி அம்மன் மலரடியில் வீழ்ந்துருகி நித்திய சுகம் தரப்பணிந்தால் இன்பமெல்லாம் அருளி நலம் தருவாள் நம் அன்னை சக்தி.
தல அமைப்பு
இக்கோயிலுக்கு முகப்புவாயிலில் வீற்றிருந்து அருள் பொழியும் பிரம்மாண்டமான 60 அடி உயர ஸ்ரீ ராஜகாளி அம்மன் திருவுருவச் சிலையே சிறப்பம்சமாகும். ஆதி சக்தியாய் விளங்கும் ஸ்ரீ ராஜகாளி அம்மன் சிலையில் பத்துக் கரங்களிலும் முறையே கத்தி, அம்பு, கதை, சலம, சக்கரம், சங்கு, பாசக்கயிறு, பரிசமென்னும் குண்டாந்தடி உடுக்கை, குங்குமச்சிமிழ் ஆகிய பத்தும் காணப்படுகிறது. இவற்றுள் முக்கியமாக ஸ்ரீ ராஜகாளி அம்மன் சிலையில் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயுதமான சங்கு சிவச் சக்கரமும், சிவ பெருமானின் ஆயுதமான உடுக்கை மற்றும் பாசக் கயிறும், பார்வதி அம்மனின் ஆயுதமான கத்தி மற்றும் கதையும் ஒருங்கே அமையப்பெற்று இருப்பது அம்மனின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்துகிறது.
சர்வ சக்தி கொண்ட ஸ்ரீ ராஜகாளி அம்மன் சிலைக்கு அருகில் தல விருட்சமான நாகலிங்க மரமும் ஸ்ரீ ராஜகாளி அம்மன் அடிப் பாகத்தில் வலப் புறமாகச் சுடலைக் காளியம்மனும் இடப்புறத்தில் சாமூண்டீஸ்வரி அம்மனும் காட்சியளிக்கின்றனர். அம்மன் சிலைக்கு மேற்கு நோக்கி சாந்த சொரூப ராஜகாளியம்மன் சன்னதியில் ராஜகாளியம்மன் சாந்தம் உள்ள மூலவராகக் காட்சியளிக்கிறார். கருவறையில் இடப் புறத்தில் பால விநாயகரும் வலப் புறத்தில் பால முருகரும் காட்சி அளிக்கின்றனர். அம்மன் சன்னதிக்கு கருவறைக்கு வலப் புறத்திசையில் நாககாளி அம்மன் சன்னதி உள்ளது. நாககாளி அம்மனுக்கு வலது புறத்தில் காரமுள்ளால் அருள் வாக்கு மேடை அமைந்துள்ளது. அம்மன் சன்னதியில் மேற்கு திசையில் ஆஞ்சநேயர் சன்னதியும் வட திசையில் யாக சாலை மண்டபமும் அமைந்துள்ளன. யாக சாலை மண்டபத்தின் அருகே உற்சவ மூர்த்தியாகக் காளி அம்மனும் கடைக் கோடியில் நவகிரக சன்னதிக்கு அருகில் சப்த கன்னிகளும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்ததே அகரம் என்னும் இத்திருத்தலமாகும்.
{ புகைபடங்கள் }
அம்மன், உற்சவர், திருவிழாக்கள், சுவாமிகள் புகைபடங்கள்
{பலன்கள் }
வாழ்க்கையில் அதிக அளவில் துயரங்களையே சந்தித்து வந்த மனிதர்கள் இந்த புண்ணிய பூமியில் ஸ்ரீ ராஜகாளி அம்மனைத் தரிசித்த பிறகு அளவில் அடங்கா ஆனந்தத்தையும் மன அமைதியையும் அடைகிறார்கள். பக்தர்களின் குறைகளையெல்லாம் கருணையோடு நீக்கி அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ ராஜகாளி அம்மன்